Montag, 28. Februar 2011

தயா மாஸ்டர் மீதான வழக்கில் சட்டமா அதிபரின் அபிப்பிராயம் கோரியுள்ள சிஐடீ

தயா மாஸ்டர் மீதான வழக்கில் சட்டமா அதிபரின் அபிப்பிராயம் கோரியுள்ள சிஐடீ


(ரி.பாரூக் தாஜுதீன்)  தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீதான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தைக் கோரவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கூறினர்.

இதுவரை காலமும் இந்த இருவர் மீதும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 'குற்றத்தாக்கல்' செய்யாத நிலையில் செய்யாத நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு இவர்களின் வழக்குறைஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

தயா மாஸ்டரின் வாக்குமூலத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி அவர் பதில் கிடைத்ததும் மேற்கொண்டு செய்வது பற்றி நீதிமன்றுக்குத் தெரிவிப்பதாக குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கூறினர்.

தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்டரும் புலிகள் இயக்கத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக செயலாற்றியவர்கள். இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். மேற்படி வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Mittwoch, 12. Januar 2011

http://www.nitharsanam.net/?m=200904&paged=7&sess=6ed35264162b54c85383f9bf7884d0a4

வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் -தயாமாஸ்டர்

வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் -தயாமாஸ்டர்
படையினரிடம் நேற்று (22) சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் பல முக்கிய தகவல்களை இராணுவத்திருக்கு வழங்கி வருவதாக தெரியவருகின்றது. சரணடைந்துள்ள அவர்கள் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாராக விளங்கிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புலிகள் இயக்கத்தினரால் ஒதுக்கப்பட்டதாவும் அவ்வியக்கத்திற்கும் தமக்குமான தொடர்புகள் [...]

http://www.nitharsanam.net/?p=2473&sess=435e5f38ee8a2b4378a8d37f07dcf251

யாழ்ப்பாண சாலையை மீண்டும் திறக்க அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்

ANI.LTTE.gifதமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியை இலங்கையின் இதர பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான சாலையை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிட இலங்கை அரசு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ள வேண்டும் என்று புலிகள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ளவில்லையெனில், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்றும் புலிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந் நிலையில் மேற்கண்ட கோரிக்கையை புலிகள் எழுப்பியுள்ளனர்.
“”சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் புலிகளின் பிரதிநிதிகள், இலங்கையின் இதர பகுதிகளுடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் சாலையை மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவார்கள்” என்று புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான தயா மாஸ்டர் வெள்ளிக்கிழமை கூறினார்.
இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் நகரம் இருக்கிறது. ஆனால், யாழ்ப்பாணத்தை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாகச் செல்கிறது.
அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், 5 லட்சம் மக்கள் உணவு, மருந்துப் பொருள்கள், இதர அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அச்சாலையை ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு மூடிவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அச் சாலையை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்று புலிகள் வலியுறுத்தியுள்ளனர்

Samstag, 1. Januar 2011

http://www.eelampress.com/2010/10/1515/


கே.பி., கருணா, தயாமாஸ்டர் சுகபோகம் அனுபவிக்க முன்னாள் தளபதிக்கு சோறும் தேங்காய்ச் சம்பலுமா?

முன்னாள்  இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டத்தை ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து முன்னெடுக்க கட்சி தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட கருணா, கே.பி.,தயாமாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டைக் காப்பாற்றிய தளபதி சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பது தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கமும் ஜனாதிபதியும் ஜனநாயக பாதையிலிருந்து விலகிச் செயற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகவே காணமுடிகின்றது.
நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து காப்பாற்றிய இராணுவத் தளபதி இன்று சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பௌத்த மகா சங்கத்தினரையும் அப்பாவி சிங்கள, முஸ்லிம், மக்களையும் கென்றுகுவித்த கருணா, கே.பி., தயாமாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக விடப்பட்டிருப்பதோடு அவர்கள் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரிப்பார் என்று இந்த நாட்டில் வாழும் எந்தவொரு பிரஜையும் எதிர்பார்க்கவில்லை. இந்தளவுக்கு சர்வாதிகாரப் போக்கில் அவர் நடந்து கொள்வார் என்று எவருமே நம்பவில்லை. அனைவருமே ஜனாதிபதி தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார். மன்னிப்பார் என்றே எதிர்பார்த்தனர். ஜனாதிபதியின் இந்த முடிவை நாட்டின் 5/6 பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர்.
போதாக்குறைக்கு இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செயற்படுவோர் மீது அடக்கு முறையை பிரயோகிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துண்டுப் பிரசுரம் விநியோகித்தால் கைது, சுவரொட்டிகள் ஒட்டினால் பொலிஸார் தாக்குதல் இதுதான் மகிந்த ஆட்சியின் ஜனநாயகம்.ஆட்சியாளரின் இந்த சர்வாதிகார அடக்கு முறைகளைக் கண்டு நாம் ஒதுங்கப் போவதில்லை. மக்கள் பலத்தை அணிதிரட்டி நாடு பூராவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மத வழிபாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம். அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒன்றுபட்டு போராட்டத்திலீடுபடுவதென ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.நாட்டிலுள்ள 20 பிரதான மத வழிபாட்டுத் தலங்களில் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக பூஜை வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் நடத்தவிருக்கின்றோம். தொகுதிகள், கிராமங்கள் தோறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருக்கின்றார். அதில் தேசத்தைக் காப்பாற்றிய தளபதியை குற்றவாளியாக்கி சிறையில் தள்ளியிருப்பதைக் கண்டித்து அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தவிருக்கின்றார் எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75172

Posted 07 September 2010 - 02:40 PM
பாடகர் சாந்தனை விடுவித்தார் தயாமாஸ்ரர்!

தாயகத்தின் எழுச்சிப் பாடகரான எஸ்.ஜி.சாந்தன் நேற்று முன்னாள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009 மே 18ஆம் திகதி இராணுவத்தினரால் ஓமந்தையில் கைது செய்யப்பட்ட சாந்தன் இராணுவத்தின் பல்வேறு முகாம்களில் விசாரணைகளுக உட்படுபடுத்தப்பட்டதன் பின்னர் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாராந்தம் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுவந்திருந்தார்.

இதேகாலப்பகுதியில் திருமதி மஹிந்தராஜபக்சவினால் போராளிகள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களில் சாந்தனும் இடம்பெற்றிருந்தார்.

குறித்த கலைஞர்களை விடுவிப்பதாக கடந்த சில மாதங்களாக முன்னாள் போராளிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை ஊடக இணைப்பாளராக செயற்பட்டு வந்த தயா மாஸ்ரர் சாந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த வவுனியா தடுப்பு முகாம் ஒன்றுக்குச் சென்று சாந்தனை விடுவித்து அழைத்துச் சென்றதாக அங்கிருந்து ஈழநேசன் செய்தித்தளத்திக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா நிகழ்வை ஒட்டி ஈபிடிபியின் ஊடகமான டான் ரீவியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்வதற்காகவே சாந்தன் அவசரமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டான் ரீவியின் யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரியாக தயாமாஸ்ரர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி
ஈழநேசன் 
பணம் பெரிது பதவி பெரிது
மொழியாவது தேசியமாவது

Montag, 20. Dezember 2010

http://www.tamilwin.org/view.php?22ipXdc3PI24bi2F302HQKcd2ojR2eP982e2SLB4b31Ga0

 
   

செய்தி
யாழ். ஊடகவியலாளர்களை உளவுபார்க்கும் பணியில் தயா மாஸ்டர் குழுவினர்
[ சனிக்கிழமை, 18 டிசெம்பர் 2010, 09:38.21 AM GMT +05:30 ]
யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளில் உள்ள இணையத்தளத்திற்கு பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களை பற்றிய விபரங்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியப்படுத்தும் வேலையில் இரண்டு ஊடகவியலாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர். 
கடந்த காலங்களிலும் சரி தற்போதும் யாழ்ப்பாணத்திலும் அதற்கு வெளியேயும் சரி நடந்து கொண்டிருக்கின்ற அநீதிகளை இந்த ஊடகவியலாளர்களே புடம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த ஊடகவியலாளர்களை வேட்டை நாய்களைப் போல் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது சில கையேந்திகளைக் கொண்டு இந்த ஊடகவியலாளர்களை அடையாளம் காண்பதற்கு இராணுவத்தினர் முனைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
கொழும்பில் இருந்து வந்த ஈ.பி,டி.பி ஆதரவுள்ள றுசாங்கன் என்பவரும், துரோகத்தனத்திற்குப் பெயர் போன தயா மாஸ்ரரும்தான் இந்த கையேந்திகள்.
இவர்கள் சில அரச அதிகாரிகளுக் கூடாக இந்த ஊடக வியலாளர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வருகின்றனர். இவர்கள் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னரும் இணையத்தளங்கள் பற்றி கூறியிருக்கின்றனர்.
இதனோடு குடாநாட்டில் உள்ள பத்திரிகைகளிற்கு சிறப்புச் செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களும் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களாம்.

Montag, 13. Dezember 2010

http://thatstamil.oneindia.in/news/2010/11/17/prabhakaran-did-big-mistake-daya-master.html

இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்காதது பெரும் தவறு-சொல்கிறார் தயா மாஸ்டர்

Daya Master
Vote this article
Up (206)
Down (139)
Ads by Google
Steuerberater & Master  www.taxmaster.de
2 Abschlüsse, berufsbegleitend, ab April, Master of Arts in Taxation
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்திய ஒப்பந்தத்தை ஏற்று செயல்பட்டிருந்தால் இந்த அழிவு வந்திருக்காது தமிழர்களுக்கு என்று சிங்கள ராணுவத்தின் பிடியில் உள்ள புலிகள் இயக்க முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆட்சியின்போது, அவர்களின் பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர். இறுதிப் போரில் தயா மாஸ்டர் ராணுவத்திடம் சரண் அடைந்தார். தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இலங்கை அரசின் தொலைக்காட்சி பிரதிநிதியாக செயல்படுகிறார்.

இலங்கை போர் தொடர்பாக விசாரித்து வரும் கமிஷனிடம் அவர் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த பேரழிவுகள் ஏற்பட்டு இருக்காது. அதன் பிறகும் 1990, 1995, 2000-ம் ஆண்டுகளில் இலங்கை அதிபர்கள் சமரச தீர்வுகளுக்கு முன்வந்தனர். அதையும் பிரபாகரன் நிராகரித்து விட்டார். இதனால்தான் ஏராளமான மக்கள் பலியாகும் நிலை உருவாகிவிட்டது.

2002-ம் ஆண்டு போர் ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் மீறினார்கள். 4-வது ஈழப்போர் தொடங்கிய நேரத்தில் விடுதலைப்புலிகள் மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

அதில் அமைதியான தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பேரிழிவுகள் தவிர்க்கலாம் என்றும் கூறி இருந்தனர். ஆனால் பிரபாகரன் இதை கண்டு கொள்ளவே இல்லை.

இறுதி போர் காலத்தில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க போர் இல்லாத பகுதியாக சில இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இதை விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் யாருமே மதிக்கவில்லை. இதனால்தான் ஏராளமான பொதுமக்கள் பலியானார்கள்.

இப்போது போர் முடிந்துள்ள நிலையில் ஈழ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். கைதான விடுதலைப்புலிகள் விடுதலை செய்ய வழி காணப்பட வேண்டும். காணாமல் போனவர்களும் கண்டுபிடிக்க வேண்டும்...", என்றார்.

போரின் இறுதிக் கட்டம் வரை புலிகளுடன் இருந்து கடைசியில் இலங்கை ராணுவத்திடம் போய்ச் சரணடைந்தவர் தயா மாஸ்டர். இவர் குறிப்பிடும் ஆண்டுகளில் புலிகளின் படைப்பிரிவில் பத்திரிகைத் தொடர்பாளராக இருந்தார்.